Monday, December 7, 2015

Clarification about El Niño Rumour & BlindChennai Scam

07/12/2015 11:30 AM - Thanks Vikatan

இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிவேகமாக பரவிக்கொண்டிருகிறது.  

“சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் 'EL Nino' சுழற்சி புயல். கிட்டதட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையே மூழ்கிப்போக வாய்ப்பு உண்டு. google ல Search பண்ணி பாருங்க தெரியும். எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியப்படுத்துங்க...
PLZ... அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல” - இது முதல் வதந்தி. 

டிசம்பர் 16 முதல் 22 வரை சூரிய புயலால் நாம் சூரியனை பார்ப்பது கடினம்... பூமி இருளில் முழ்கும் - நாசா அறிவிப்பு. - இது இரண்டாவது வதந்தி. 

Fact:

”உண்மையில், 'எல் நினோ' என்பது தென் அமெரிக்கா பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றம். பசுபிக் கடல் சற்றே சூடு அதிகமாகி அதன் காரணமாக தென் அமெரிக்கா, கலிபோர்னியா முதலிய இடங்களில் மழை பொழிவு ஏற்படும். 'எல் நினோ' உலக வானிலையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் செயற்கை கோள்வழி அதனை கண்காணிக்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.

'எல் நினோ' தீவிரம் அடையும் ஆண்டுகளில் வங்காள விரிகுடாவின் கடல் நீர் வெப்பம் சற்றே உயரும். அதன் காரணமாக கூடுதல் நீராவி உயர்ந்து மழை கூடுதலாகும். 1997 ல் உருவான தீவிர 'எல் நினோ' போல இந்த ஆண்டும் தீவிரம் அடைந்து வருகிறது என நாசா வானிலை செயற்கைக் கோள்கள் கண்டுள்ளன.
இந்த ஆண்டும் இதன் தொடர்ச்சியாக  1997 ல் நிகழ்ந்ததுபோல அமெரிக்கா பகுதிகளில் பெரு மழை பொழியும் என்றும், வரும் 2016- ம் ஆண்டு, சராசரிக்கும் கூடுதலான வெப்பம்  கொண்ட ஆண்டாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 'எல் நினோ' ஒரு புயல் அல்ல; சென்னையை நோக்கி வராது; சென்னை அல்லது தமிழகம் குறித்து நாசா எந்த ஒரு முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுவே நிஜம்.

இரண்டாவது வதந்தி, Huzlers.com எனும் வலைத்தளம் விஷமத்தனமாக வேடிக்கை காட்ட பரப்பிய செய்தி. இந்த போலியான செய்தி காட்டுத் தீ போல பரவி உலகெங்கும் பீதியை கிளப்பியிருக்கிறது. உண்மையில், சூரிய (காந்த) புயல் அவ்வப்போது ஏற்படும் என்பது உண்மைதான். இந்த காந்தப் புயல் பூமியை வந்து மோதும்போது விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்களின் தகவல் தொடர்பு முதலியவை பாதிக்கப்படும். 

மிக தீவிர காந்த புயல் வீசினால் ஐரோப்பா முதலிய பகுதிகளில் குறிப்பாக துருவத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்தொகுப்பு கருவிகள் (ட்ரான்ஸ்பார்மர்கள்) செயலிழந்து ஐரோப்பிய நகரங்கள் இருளில் மூழ்கலாம் அவ்வளவுதான்.

மின்சாரம் தடைபடுவதால் மின்விளக்குகள் எரியாது. இதைத்தான் 'உலகமே இருன்று விடும்' என இணைய தளங்களில் பரப்பிவருகிறார்கள் விபரமறியாத விஷமிகள். நிஜத்தில் உலகே பல நாட்கள் இருண்டு விடாது. 

இதனால் உலகைப்பற்றியோ சென்னையைப்பற்றியோ யாரும் எந்த பதற்றத்திற்கும் உள்ளாகவேண்டாம். பரபரப்புக்கும் ஒருவித சுவாரஸ்யத்திற்கும் இப்படி செய்திகளை பரப்புபவர்கள் தாங்கள் மக்கள் மனதில் எத்தகைய பீதியை உண்டாக்குகிறோம் என்பதை உணர்வதில்லை

 - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் - தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

Source:

http://www.vikatan.com/news/tamilnadu/55968-earth-on-december-16-tamilnadu-sciense-forum.art

Christian missionaries are busy in distribution of Bible copies for free in Chennai.

07/12/2015 10:00 AM

கிறிஸ்தவ மிஷனரிகள், சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களுடன் பைபிள் விநியோகம் செய்வதாக புகைப்படங்களுடன் சில செய்திகள்  பரவியது. 

மூன்று நாட்களுக்கு முன்பு வடஇந்திய ட்விட்டர் பயனாளிகளால் பரப்பப்பட்ட இத்தகவல், இன்று தமிழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.. 



Fact: 


கிறிஸ்தவ மிஷனரிகளிடம் நமக்கு சில விசயங்களில் முரண்பாடுகள் உண்டு என்றாலும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கும் இந்நேரத்தில் இதுபோன்ற தகவல்கள் பரவுவது சமூக பதட்டத்தையே அதிகரிக்கும் என்பதால் இச்செய்தி குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த செய்திகளில் அவர்கள் கொடுத்திருக்கும் புகைப்படங்கள், முறையே 2013 மற்றும் ஜூன் 2015 காலகட்டங்களில்  கிறிஸ்தவ மிஷனரிகளாலேயே வெளியிடப்பட்டது.




Source:

http://www.indiavillagecare.com/gallery/pic.php?id=206

http://mygodandyoursjesuschrist.com/feed-the-poor-saints-of-india/

https://www.facebook.com/photo.php?fbid=946823335386944&set=a.174844715918147.42179.100001778585255&type=1&theater

https://twitter.com/thekinshu/status/673175361916563458



Sunday, December 6, 2015

This little girl is lost in Chennai floods


6/12/2015 11: 30 PM



சென்னை மழையால் பெற்றோரை பிரிந்த குழந்தை என சமூகவலை தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர் விஷமிகள்.

Fact: 

இந்த குழந்தை டெல்லி யில் கிடைத்தது என்று ஒரு சாராரும், பெங்களூரில் கிடைத்தது என இன்னொரு சாராரும் டிவிட்டரில் பகிர்ந்துக் கொண்டிருக்கின்றனர். நவம்பர் 2014 முதலே இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. அத்தகவல்களின் உண்மை தன்மை பற்றி நமக்கு தெரியவில்லை என்றாலும் கண்டிப்பாக இது சென்னை மழையால் தவறிப்போன குழந்தை அல்ல என்பது மட்டும் உறுதி.

Source: 


https://twitter.com/Lvenky73/status/531327320649236480
https://twitter.com/PandeyJaideep/status/619548374774091776

R J Balaji donates 1 crore for Chennai flood victims

06/12/2015 11:00

வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே. பாலாஜி, சென்னை மழை வெள்ளம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார் என்ற செய்தி 03/12/2015  அன்று ஃபேஸ்புக், டிவிட்டர் மற்றும் இணையதளங்களில் செய்திகள் பரவியது.  பின்னர் அவரே அச்செய்தியை மறுத்தார்.



Fact:

Child found near MMDA Colony.Help finding his parents

06/12/2015 10:00 PM


சென்னை மழையால் பெற்றோரை பிரிந்த குழந்தை என்ற செய்தி ஒன்று டிவிட்டர் மற்றும் முகநூலில் பரவி வருகிறது. 



Fact: 
Arun Chauhan என்ற முகநூல் பயனரால் இந்த புகைப்படம் 27 அக்டோபர் 2015 அன்று பகிரப்பட்டுள்ளது. " Vidyavihar என்ற ரயில் நிலையத்தில் இக்குழந்தையின் தாயார் தவறி விழுந்ததாகவும், அவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த குழந்தையை பற்றிய அடையாளம் தெரியவில்லை" என்றும் அப்பதிவு சொல்கிறது.

அப்பதிவின் உண்மை தன்மை பற்றி நமக்கு தெரியவில்லை என்றாலும் நிச்சையமாக இது 'சென்னை மழை' யோடு சம்மந்தப்பட்டதல்ல என்பது மட்டும் உண்மை. 



Source: https://www.facebook.com/arun.chauhan.1485537/posts/1014925608527639
https://www.facebook.com/photo.php?fbid=569878656508222&set=a.250616795101078.1073741828.100004582770373&type=3&theater



This little girl is lost in Chennai floods pls help her find her parents.

06/12/2015 8:00 PM

சென்னை மழையில் ஒரு குழந்தை தனியாக கண்டெடுக்கப்பட்டதாகவும், அதன் பெற்றோரை கண்டுபிடிக்க உதவி கேட்டு கடந்த இரண்டு நாட்களாக டிவிட்டர் மற்றும் முகநூலில் கீழே உள்ள புகைப்படம் வலம் வருகிறது.

திரைப்பட பிரபலங்களான தனுஷ், ஸ்ருதிஹாசன், திரிஷா போன்றவர்களும் அந்த செய்தியை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.


Fact: இந்த செய்தியை Aisshvarya Malini என்ற முகநூல் பயனாளர் பெப்ரவரி 26 2015 ல் பகிர்ந்திருக்கிறார்.






பிறகு அவரே அந்த நிலைத்தகவலின் பின்னூட்டத்தில், அந்த குழந்தை கிடைத்து விட்ட செய்தியையும் பகிர்ந்து இருக்கிறார்.



Source:


17 Kids died in Cuddalore


06/12/2015 : 5:00 PM

கடலூரில் 17 குழந்தைகள் பால் மற்றும் உணவு இன்றி இறந்ததாக செய்திகள் முகநூலில் பரவுகிறது. 



Fact:  17 குழந்தைகள் இறந்ததாக முகநூல் தவிர எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த புகைப்படம் 2004 ஆம் ஆண்டு  தாக்கிய சுனாமி நேரத்தில் எடுக்கப்பட்டது.
Source: http://www.rp-online.de/panorama/ausland/indien-kuendigt-aufbau-von-tsunami-fruehwarnsystem-an-aid-1.1611626

Lake between thaiyur and thiruporur about to breech


06/12/2015 : 3:00 PM
Anyone staying in kelambakam... Please come out.. Hearing that lake between thaiyur and thiruporur about to breech... Cops announcing in mike, pls warn your friends nearby...This news getting frm my frnd.. Ill confirm once again.. Stay safe






Fact: It is a rumour

Source:



https://twitter.com/SunTV/status/673503564682121216

Crocodile in medavakkam sholinganallur main road.

06/12/2015 : 11:00 AM

A rumour is spreading stating people found a Crocodile near Medavakkam Sholinganallur Main road.



Fact:

This photo was taken from an old news (March 2015).

Source:

http://www.barodarocks.com/crocodile-park-between-vadodara-and-jambughoda/

#‎Vadodara‬ : Crocodiles in Vadodara and surrounding region may get a new and safe home in coming years. Concerned over the crocodile-human conflict in Vadodara city and district areas, the forest department is planning to come up with a crocodile park between Vadodara andJambughoda taluka of Panchmahal district.

they are considering a location between Vadodara and Jambughoda and the idea is to give crocodiles an ideal environment. Sources said that the crocodile park project was also discussed with additional chief secretary, forests and environment department, P K Taneja some time ago.